கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட வண்ணக்குடி கிராமத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப்பட்டு படுகொலை

196

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட வண்ணக்குடி கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் இவர் கூலி வேலை செய்து வருகிறார் கல்யாண சுந்தரத்தின் அக்கா மகளே அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து இரண்டாவது மகன் நவீன் காதலித்து வந்ததாக தெரிகிறது காதலித்த வந்த நவீனுக்கும் கல்யாண சுந்தரருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று அதிகாலை கல்யாணசுந்தரிடம் பேச வேண்டுமென்று மாரிமுத்து மகன் மூத்த மகன் மகேந்திரன் வரச்சொல்லி பேசிக்கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்யாணசுந்தரத்தை மகேந்திரனும் நவீனம் கத்தியால் குத்தியதால் சம்பவ இடத்திலேயே கல்யாணசுந்தரம் உயிரிழந்தார் தகவல் அறிந்த காவல்துறை ஆய்வாளர் விஜயா உதவி ஆய்வாளர் கபிர்தாசன் சிறப்பு உதவியாளர் காமராஜ் பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் அப்பகுதியில் மறைந்திருந்த மகேந்திரனை ஆய்வாளர் விஜயா பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் தப்பி ஓடிய நவீனை தேடி வருகின்றனர்.காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here