

நேற்று 26.08.2020 ம் தேதி ஆள்கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த Gr.I PC 2908 திரு.திருப்பதி என்பவருக்கு மதுரை டவுன் , காக்கா தோப்பு ஸ்டார் டவர் விடுதியின் அறை எண் 303 மற்றும் 306 ல் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி திடீர்நகர் ச & ஒ காவல் ஆய்வாளர் திருமதி S. கீதாலட்சுமி, அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு . S. முருகேசன் மற்றும் காவலர்களுடன் அங்கு சென்று சோதனை செய்ததில் அங்கு மூன்று பெண்களை வைத்து குமார் வயது 38/20 த/பெ. குணபாண்டியன் , கதவு எண் 1/125 . மேட்டுப்பட்டி , சாத்தூர் , விருதுநகர் மாவட்டம் , முகமது ரிஸ்வான் வயது 32/20 , தோவாளை , நாகர்கோவில் , கன்னியாகுமரி மாவட்டம் , தசரதன் வயது 49/20 , S / o . துரைபாண்டி , கதவு எண் 20 ,1 ம் பிளாக் , திடீர்நகர் , மதுரை ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து விபச்சார தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது . ஆகவே மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஸ்டார் டவர் விடுதியின் உரிமையாளர் சிவகுமார் கைது செய்யப்படவில்லை. அவருக்கு சொந்தமான விடுதியில் விபச்சாரம் நடைபெறுகிறது என்று அவருக்கு நன்கு தெரிந்திருந்தும் அதற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்து அனுமதித்துள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். பாதிக்கப்பட மூன்று பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்