பல்லாவரம் அருகே சிறுமியை கிண்டல் செய்து தாக்கிய நபரை போலிசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

163

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதி சாந்தி நகர் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (29) அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள நகராட்சி கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்த போது அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்த பச்சையப்பன் அந்த சிறுமியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது .இதை கண்ட சிறுமி அவரை பார்த்து காரிதுப்பியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார் அழுதுகொண்டே சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் .இதனையடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து பெற்றோர் புகார் அளித்த நிலையில் அப்பகுதியில் சுற்றிதெரிந்த பச்சையப்பனை கைது செய்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் போலிசார் நடத்திய விசாரணையில் கிண்டல் செய்து தாக்கியதை ஒப்புகொண்டதை அடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.பட்டபகலில் சிறுமியை கிண்டல் செய்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here