செங்கல்பட்டு அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலரஞ்சலி

139

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ் குமார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் காய்ச்சல், இருமல் இருந்ததால் கடந்த 18 ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார், அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 23 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சக காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், அவரை தொடர்ந்து மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் உட்பட காவல் துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here