


மதுரை மாவட்டம், வரிச்சூர் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் போர்வெலில் 25 அடி ஆழத்தில் ஆட்டுக்குட்டி தவறி விழுந்து விட்டதாம்.
இது குறித்து, மதுரை தல்லாகுளம் தீயணைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் அலுவலர்கள் விரைந்து வந்து போர்வெலில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டனர். விழுந்தது ஆட்டுக்குட்டி என்று அலட்சியம் காட்டாமல் விரைந்து செயல்பட்டு ஆட்டுக்குட்டியை மீட்டது உரிமையாளரிடம் ஒப்படைத்தது தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி சென்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்