
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயமானதை அடுத்து கடலோர காவல் குழுமம் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிரமாக தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் நித்திஷ் (18 ) இவரின் நண்பர்கள் முகேஷ் மற்றும் ஆதி ஆகிய இருவருடன் வாலிநோக்கம் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார். கடலில் குளித்த போது நித்திஷ் எதிர்பாராமல் கடல் அலையில் சிக்கி மாயமானார் .
மாயமான இளைஞரை மெரைன் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிரமாக தொலைநோக்கு கருவிகளைக் கொண்டு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாயமான இளைஞரின் உறவினர்கள், மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் சோகத்துடன் குவிந்து உள்ளனர்.