





கீழ் அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 5 பேர் குண்டர் தடுப்புக் காவலில் கைது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணம் ஊராட்சியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் வயது 38 த/பெ என்பவரை தாமோதரன் வயது55 த/பெ சாமிக்கண்ணு
ராஜதுரை வயது 25 ராதாகிருஷ்ணன்,கவியரசு வயது 21,தங்கவேல்
சுபகணேஷ் வயது 24,பக்கிரி
தமிழ்வாணன் வயது 23,
தணிகாசலம்வில்பர்
மணிமாறன்,தர்மராஜ் (தலைமறைவாக உள்ளார்)
தினேஷ்
பக்கிரி மணிவண்ணன்
வேங்கடபதி ஆகியோர்கள் கைதுசெய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்
இவர்களில் தாமோதரன்,ராஜதுரை,
கவியரசு, சுபகணேஷ்,
தமிழ்வாணன் ஆகிய 5 பேரும் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் குற்றவாளிகள் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.