காட்டுமன்னார்கோவில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் மயில் என்கின்ற ராகுல் வயசு 27 இவர் கடந்த 3ஆம் தேதி ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் போது காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் இவரை பிடிக்க முற்படும்போது இவர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரனை தாக்க முயன்றார் இதுகுறித்து புகாரின் பேரில் ராகுல் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் இவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு ஸ்ரீதரன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர சாக மூ ரி ராகுலை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார் ஏற்கனவே 3 ம் தேதி முதல்
கடலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது