Home தமிழ்நாடு கும்பகோணம் அருகே முட்புதர்க்குள் கிடந்த 2 வயது சிறுமியின் உடல்… காவல்துறை விசாரணை…!

கும்பகோணம் அருகே முட்புதர்க்குள் கிடந்த 2 வயது சிறுமியின் உடல்… காவல்துறை விசாரணை…!

0
கும்பகோணம் அருகே முட்புதர்க்குள் கிடந்த 2 வயது சிறுமியின் உடல்… காவல்துறை விசாரணை…!

முட்புதரில் கிடந்த 2 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணத்தில் அசூர் புறவழிச் சாலைக்கு அருகே உள்ள முட்புதரில் 2 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் இறந்த நிலையில் துண்டின் மீது இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தை கொலை செய்யப்பட்டு இப்படி வைத்து விட்டு சென்றிருப்பார்களா..?என பல்வேறு கோணங்களில் காவல் துறை ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here