
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிலர் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிவது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.
போலீசார் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நேற்று மட்டும் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக 276 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 22 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தஅளவில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 46 ஆயிரத்து 919 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக 60 ஆயிரத்து 311 பேரை கைது செய்து உள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 12,990 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.