


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பயன்பாடற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் கடந்த ஐந்து மணிநேரமாக தீயணைப்பு துறையினர் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்
திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் பகுதியில் சௌந்தர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது என கடந்த சில வருடங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது இதனால் மழை நீர் தேங்கி கிடக்கும் கிடங்காக மாறியதால் விடுமுறை காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குளிப்பது வழக்கம்இந்நிலையில் திருமங்கலம் சோழவந்தான் சாலை பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி விமலா தம்பதியினரின் இரண்டாவது மகன் ராகேஷ்(16) இவன் திருமங்கலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான் இந்நிலையில் நேற்று மாலை தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சௌந்தர் கல்குவாரிக்கு குளிக்கச் சென்றுள்ளான் குளிக்கும்போது ஆழமான பகுதி சென்றதால் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளான் நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்து முடியாததால் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினான்.தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் மதுரை திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி அவர்களின் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கல்குவாரியில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர் 5 மணி நேரமாக தேடியும் கிடைக்காததால் இருள் சூழ்ந்த காரணத்தினால் மறுநாள் காலை அதாவது இன்று தேடலாம் என காலை 6 மணி முதல் தேடத் தொடங்கினர் சிறுவனின் உடல் தொடர்ந்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் இந்தநிலையில் இன்று மதியம் 2 30 மணி சிறுவனின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது சுமார் 20 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்ட திருமங்கலம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உயிரிழந்தது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

