
சாலை விதிகளை மீறினால் உங்களின் தலைவிதி மாறிவிடும் என்று கனரக உரிமையாளர்கள் மற்றும் சிமெண்ட் நிறுவன அலுவலர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அறிவுரை .
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்திலமாவட்ட காவல் துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் கூடுதல்காவல்துைறை கண்காணிப்பாளர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் திருமேனிமற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலையில் இன்று சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.




இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேசியதாவது:சுரங்கப் பகுதியில் பணிபுரிபவர்களின் நலன் கருதி விபத்து ஏற்படாவண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கனரக வாகனங்களுக்கு முறையான சான்றிதழ் மற்றும் Road worthy certificate இருத்தல் அவசியம். கனரக வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கனரக வாகனங்களின் பெயர் பலகை மற்றும் பதிவு எண் போன்றவை தெளிவாக தெரிய வேண்டும். கனரக வாகனங்களில் அதிகம் பாரம் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் தார்ப்பாய் மூலம் கட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயக்க வேண்டும். மீறும் ஓட்டுநர்கள் மீதும் ,நிர்வாகத்தின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்தும் ஓட்டுநர்களை பணியிலிருந்து நீக்கி நல்ல தகுதியான நபர்களை பணியில் அமர்த்த வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக ஒளிரும் பட்டை ஒட்டி இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் பொழுது கண்டிப்பாக ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது மீறும் பட்சத்தில் ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலே குறிப்பிட்ட விதிகளை மீறும் பட்சத்தில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீதும் வாகன உரிமையாளர் மீதும் நிறுவனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்
செல்வராசு, சிமெண்ட் ஆலை அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள்,அரியலூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.மேலும் அரியலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக நிற்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.