இராமநாதபுரம் கொலை : மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை, வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம் – மாவட்ட காவல்துறை அறிவிப்பு

189

இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது

இக் கொலை தொடர்பாக தவறான தகவலை பரப்பி மத உணர்வுகளை தூண்டி லாபமடைய பாஜகவின் H. ராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளத்தில் தவறான தகவலை பரப்பியதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை பேணும் வகையிலும் , பதட்டத்தை தணிக்கும் வகையிலும் காவல்துறை விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள காவல் துறையின் இந்த விளக்கம் பொதுமக்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு பெரும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளத்தில் பெற்றுத் தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here