
மணல் கடத்தல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- இராமனாதபுரம் மாவட்ட எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை..
இராமநாதபுரம் மாவட்டத்தில் மணல், மற்றும் கனிம வளங்களை திருடும்
நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 379 மற்றும் சுரங்கங்கள், கனிமங்கள்
ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து
பிரிவு 170 ன் பிரகாரம் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை
பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என மாவட்ட SP வருன்குமார்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க ராமநாதபுரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரத்யேகமாக அறிமுகப்படுத்திய
கைபேசி எண். 94899 19722 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ, அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் கொடுப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.