

தூத்துக்குடி மாவட்டம்:02.09.2020
கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீர மரணமடைந்தார். அவர் வீரமரணமடைந்து இன்று (02.09.2020) 16வது தினம் என்பதால் தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காவலர் சுப்பிரமணியன் அவர்களின் வீர தீர செயலை போற்றும் வகையிலும், அவரது வீரமரணத்திற்கு இன்று 16வது நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் அனைவரும் காவலர் சுப்பிரமணியன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு கடந்த 31.08.2020 தமிழக காவல்துறை சார்பாக ரூபாய் 86,50,000 /- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. காவலர் சுப்பிரமணியன் மரணமடைந்திருந்தாலுமஅவர் குடும்பமும் காவல்துறையை சேர்ந்த குடும்பம்தான், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்,மேலும் என்ன உதவிகள் கேட்டாலும் செய்ய தயாராக உள்ளோம்.இந்த ஓய்வு பெற்ற காவல்துறை சங்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 30 முதல் 35 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்கலாம். அவரது குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க தலைவர் ஒய்வு உதவி ஆய்வாளாகள் திரு. ஜெபமணி, துணை தலைவர் திரு. சேதுராஜ், செயலாளர் திரு. மாரியப்பன், பொருளாளர் திரு. பால்ராஜ், துணை செயலாளர் திரு. ஆறுமுக நயினார், நிர்வாக குழு தலைவர் ஓய்வு ஆய்வாளர் திரு. ராமசாமி, உறுப்பினர்கள் ஓய்வு உதவி ஆய்வாளர் திரு. ராமலிங்கம், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஓய்வு திருமதி. ஜாய் ஐசக் பாண்டி, காவல் ஆய்வாளர்கள் ஓய்வு திரு. வேல்சாமி, திருமதி. ஞானசெல்வம், உதவி ஆய்வாளர்கள்; ஓய்வு திரு. ஜெகவீரபாண்டியன், திரு. ஜெயப்பிரகாஷ், திரு. பொன்ராஜ், திரு. சந்திரன், திரு. கசமுத்து, திரு. நடராஜன், தலைமை காவலர்கள் ஓய்வு திரு. சங்கர்ராஜ், திரு. சொக்கலிங்கம் மற்றும் மற்றொரு சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.இதில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் (பொறுப்பு) திரு. பழனிக்குமார், சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்து சுப்பிரமணியன், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள் உட்பட உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
