மணல் திருட்டை தடுக்க 5 தனிப்படைகள், மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – எஸ்.பி.ஜெயக்குமார் எச்சரிக்கை.

211

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 78 மணல் திருட்டு வழக்குகள் பதிவு செய்து, 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மணல் திருட்டை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் – மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டை தடுப்பதற்கு காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு, தீவிர ரோந்துப்பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு 78 மணல் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் திருடுவதற்கு பயன்படுத்திய டிராக்டர் 24, லாரி 12, டிப்பர் 28, ஜே.சி.பி இயந்திர வாகனங்கள் 11, மாட்டுவண்டி 8 மற்றும் மற்ற வாகனங்கள் 24 ஆக மொத்தம் 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும், மணல் கடத்தலுக்கு காவல்துறையினர் யாராவது உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மணல் கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிந்தால் காவல்துறை அவசர தொலை பேசி எண் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ‘ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்ணிற்கு நேரடியாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மற்றும் குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலமாகவோ தகவல் அளிக்கலாம். மேலும் தகவல் தருபவர்கள், தங்கள் பெயர்களை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, பெயர்கள் கொடுத்தாலும் அவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here