KV நல்லூரில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக ஜல்லி கற்களை திருடிய 2 நபர்கள் கைது

129

தென்காசி மாவட்டம், k.v.நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் ஜல்லி கற்களை திருடுவதாக உதவி புவியியலாளர் திரு.லட்சுமிராமபிரசாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு கற்பகராஜ் அவர்கள் ஜல்லிக் கற்களை டிப்பர் லாரியில் திருடி வந்த ராஜபாளையம் பகுதியை சேர்ந்த முத்து என்ற நபரையும்,இதேபோல் தனிப்பிரிவு வட்டாட்சியர் திரு செல்வன் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி.சித்திரக்கலா அவர்கள் ஜல்லிக் கற்களை சட்டவிரோதமாக திருடி வந்த ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற நபரையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஏழு யூனிட் ஜல்லி கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here