

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அரியலூர் நகர பேருந்து நிலையத்தில் இன்று அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் அரியலூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்மாறன், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்மதிவாணன் மற்றும் அரியலூர் நகர காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் பொதுப் போக்குவரத்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
கொரோனா காலத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அவர்களின் பாதுகாப்பிலும் மற்றும் மக்களின் பாதுகாப்பிலும் அக்கறை கொள்ள வேண்டும்.தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பணிபுரிய வேண்டும் என கொரோனா குறித்தும் ,சாலை பாதுகாப்பு குறித்தும் மாவட்ட காவல்துறை யினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.