


அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் 110 வயது ஆன பொன்னியம்மாள் என்ற மூதாட்டி தனது மூத்த மகன் கலியமூர்த்தி (75) உடன் வாழ்ந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் பொன்னியம்மாள் அவரது மகனும் சிரமப்படுகிறார்கள் என்பதை செய்தித்தாள் மூலம் அறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்துறை V.R.ஸ்ரீனிவாசன் இன்று பொன்பரப்பியில் உள்ள மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று மூதாட்டியின் நலம் விசாரித்தார். மூதாட்டிக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான அரிசி,பருப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மற்றும் உடை ஆகியவற்றை பரம சாந்தி என்ற அமைப்பினர் உதவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீ னிவாசன் வழங்கினார். மேலும் மூதாட்டிக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை மாதமாதம் வழங்க ஏற்பாடு செய்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.மூதாட்டிக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதிய தொகையை கால தாமதமின்றி விரைவாக அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாசில்தார் முத்துகிருஷ்ணன் , கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா மற்றும் செந்துறை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு முகக் கவசம் அணிவது அவசியம் குறித்தும் ,சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம் குறித்தும் மற்றும் கொரோனோ குறித்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
