Home தமிழ்நாடு தாராபுரத்தில் மகளிர்சுய உதவிக்குழு பெண்களை தகாத வார்த்தையில் பேசிய வங்கி மேலாளர் மீது வழக்கு.

தாராபுரத்தில் மகளிர்சுய உதவிக்குழு பெண்களை தகாத வார்த்தையில் பேசிய வங்கி மேலாளர் மீது வழக்கு.

0
தாராபுரத்தில் மகளிர்சுய உதவிக்குழு பெண்களை தகாத வார்த்தையில் பேசிய வங்கி மேலாளர் மீது வழக்கு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களை தரக்குறைவாக பேசிய கிராம விடியல் ஈசாப் வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் பெரும்பாலும் மகளிர் சுய உதவிக்குழுக்களை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த வங்கிகளை தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக கடன் வழங்கி பணியாளர்கள் மூலமாக கடன் வசூல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு குக்கிராமங்களில் 12 பேர் கொண்ட குழுவாக அமைத்து குழுவிற்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை அதாவது ஒரு நபருக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடன் வழங்குகின்றன. இதுபோல பலமுறை வங்கிகளில் கடன் பெற்று கடனை திருப்பி செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு கொண்டு வந்த நிலையில் மகளிர் தொழில் முற்றிலும் முடங்கியது இதனால் வருமானம் குறைந்து வறுமையில் வாடி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா காலத்தில் அதாவது கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வங்கிகள் எந்தக் கடனையும் வசூல் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்த உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில் வங்கி நிர்வாகம் அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கடன் வசூலிக்கும் குறிக்கோளுடன் நீங்கள் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து உடனே வழங்க வேண்டும் எனக் கூறி மகளிர் பெண்களிடத்தில் தகாத வார்த்தைகளைப் பேசி கட்டாயப்படுத்துவதகாவும் கடனை கட்டத் தவறினால் வேறு எந்த வங்கியிலும் கடன் பெற முடியாதவர் செய்துவிடுவோம் என பல வங்கிகள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாராபுரம் ஜின்னா மைதானம் தெருவில் வசித்து வரும் ஷர்மிளா (42) என்ற பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதாக தனியார் வங்கி மேலாளர் சையத் காதர் 26 என்பது மீது தாராபுரம் போலீசில் புகார் செய்தார் புகாரை பெற்ற போலீசார் விசாரணையில் உண்மை என தெரிந்ததும் வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here