அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (21), த/ பெ செல்லமுத்து . இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 16.08.2020 அன்று இரவு ரமேஷின் பங்காளியான வெங்கடேசன் என்பவருக்கும் ,விஜயகுமார் என்பவருக்கும் இடப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரமேஷ் என்பவர் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்பொழுது தாமரைக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்த த/பெ செல்வராஜ் மகன் வெங்கடேசன் (30) என்பவர் ரமேஷை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளால் கொலை செய்ய முயற்சித்துள்ளார். சற்று சுதாரித்துக் கொண்ட ரமேஷ்க்கு காது மட்டும் தாடை பகுதியில் கொடுங்காயம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு , பின்பு மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் வழக்கு பதிவு செய்ததின் அடிப்படையில் அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர்செந்தில் மாறன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியான வெங்கடேசனை நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில்அடைத்தார்.
இந்த பதட்டமான சூழ்நிலையில் வெங்கடேஷ் வெளியே இருந்தால் அவருக்கும் அவரது பங்காளி குடும்பத்தினருக்கும் இடையே சண்டை வர வாய்ப்பு இருப்பதாலும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் வெங்கடேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் , அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்(பொ) அப்துல் காபூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ரத்னா விற்கு பரிந்துரை செய்தனர். அப்பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ரத்னா குற்றவாளி வெங்கடேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் வெங்கடேசனை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் 04/09/2020 இன்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.