
அவனியாபுரம் வஉசி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 29). இவர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முத்துப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்