Home தமிழ்நாடு மதுரை அருகே வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது !!!

மதுரை அருகே வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது !!!

0
மதுரை அருகே வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது !!!

மதுரை மாநகர் இ3.அண்ணாநகர் ( ச.ஓ ) காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மணிமாரன் , சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜு அழகுபாண்டி மற்றும் மதன்குமார் ஆகியோர் மதுரை வண்டியூர் சங்குநகர் பாலம் அருகே போதை பொருள்தடுப்பு சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது காலை 08.30 மணிக்கு அந்த வழியாக வந்த TN 59 BH 8518 என்ற பதிவெண் கொண்ட TATA Ace வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது வாகனத்தின் ஒட்டுனர் 1 ) ரவி 39/2020 த.பெ. சிவமூர்த்தி K. பெருமாள்பட்டி கல்லுாத்து அஞ்சல் உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம் மற்றும் 2 ) தமிழ்குமார் 33/2020 த.பெ. ராமசாமி தெற்கு தெரு நல்லாம்பிள்ளை சிங்காரக் கோட்டை அஞ்சல் ஆத்துார் வட்டம் திண்டுக்கல் 3 ) முருகன் 24/2020 த.பெ. சந்திரசேகர் மேற்கு தெரு சொக்கலிங்கபுரம் ஆத்தூர்வட்டம் திண்டுக்கல் . 4 ) பரமேஸ்வரன் 39/2020 த.பெ.சின்னபாண்டி செம்மன் குழி தெரு பெரியகுளம் தேனி மாவட்டம் ஆகியோர் வாகனத்தின் பின்னால் அமர்ந்தும் வந்தவர்களை விசாரணை செய்த போது மேற்படி நால்வரும் TATA Ace வாகனத்தில் சென்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இனம் தெரியாத நபரிடம் இருந்து சுமார் 6.200 கி.கிராம் போதைப் பொருளான கஞ்சாவினை மொத்தமாக வாங்கி TATA Ace வாகனத்தின் சீட்டிற்கு கீழ் மறைத்து வைத்துக் கொண்டு இராமேஸ்வரம் பக்கம் சென்று விற்பனை செய்ய கொண்டு செல்வதாக கூறியவர்களை கைது செய்து வாகனத்தையும் கஞ்சாவினையும் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்துகுற்ற எண் 1635/2020 பிரிவு 8 ( C ) r / w 20 ( B ) ( i ) , ( B ) NDPS ACT & 25 NDPS Act , 29 ( 1 ) NDPS Act , 6 பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் . செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here