
மதுரை சுப்ரமணியபுரம் C2 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றுபவர் சந்தானபாண்டியன், இவர் 1988 பேட்ச் ஐ சேர்ந்தவர்.
சமீபகாலமாக அரசு அதிகாரிகள், காவலர்கள் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரானா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமதுரை சுப்ரமணியபுரம் C2 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிவரும் சந்தானபாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் மலர்சாமி கொரானா வைரஸ் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு காவலர் உயிரிழந்திருப்பது காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்