Home தமிழ்நாடு தோவாளை அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடித்த வனத்துறையினர்

தோவாளை அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடித்த வனத்துறையினர்

0
தோவாளை அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடித்த வனத்துறையினர்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சிக்குட்பட்ட குளத்து விளை பகுதியில் நேற்று முன்தினம்
இரவு 11 மணி அளவில் அருகே குமாரி என்பவர் வீட்டு முன்பு 10 அடி நீளமுள்ள மலைபாம்பு வந்துள்ளது. அப்போது தற்செயலாக குமாரி வீட்டுக்கு வெளியே வந்த போது மலைப்பாம்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் உடனே ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்படி வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பினை லாவகமானபிடித்து அடர்ந்து காட்டுப் பகுதியில் விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here