விபத்தில் படுங்காயமடைந்தவரை தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் உயர் அதிகாரிக்கு பொது மக்கள் பாராட்டு.

134

அரியலூர் மாவட்டம் தவுதாய்குளம் அருகே மருதையாறு பாலத்ததில் இன்று இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் எதிர் எதிரே மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் விஜய் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் மனைவி வேல்விழி பலத்த காயத்துடன் மயக்க நிலையில் இருந்தவரை அவ்வழியே வாகனத்தில் வந்த மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தனது அரசு‌ வாகனத்தில் உடனடியாக அரியலூர் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.எதிரே மற்றொரு வாகனத்தில் வந்தவரும் விபத்தில் படுகாயம்அடைந்தார்.அவரைகாவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலமும் ,இறந்தவரின் உடலை காவல் துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலமும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். காவல்துறையின் இந்த துரிதமான செயல்பாட்டையும் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி மனித நேயத்தையும் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here