“உங்கள் குடும்பங்களை எண்ணிப்பார்த்து வாகனத்தை கவனமாக இயக்குங்கள்” என அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் ஓட்டுநர்களுக்கு அறிவுரை.

115

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் அரசு சிமெண்ட் ஆலைவளாகத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் தினமும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சுழற்சி முறையில் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன்விழிப்புணர்வு வகுப்பில் கலந்து கொண்டு
தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பேசியதாவது:
ஓட்டுநர்கள் அவர்களின் குடும்பங்களை எண்ணிப்பார்த்து சாலையில் மிக கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும், அதிக வேகம் அதிக பாரம் கூடவே கூடாது. செல்போன் பேசிக்கொண்டு மற்றும் போதை பொருட்கள்பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை இயக்கினால் காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும். தூக்கக்கலக்கத்தில் வாகனம் இயக்கக் கூடாது, “மக்களின் உயிர் விலை மதிப்பற்றது”, சாலையில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மேலும் கொரோனா காலத்தில் ஓட்டுநர்கள் தங்களது உடல் நலனில் அக்கறை கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இறுதியாக ஓட்டுநர்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here