

அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா காலத்தில் குழந்தை பிரசவித்து , சிகிச்சை பெற்று வரும் ஏழை,எளிய தாய்மார்களுக்கு உதவிடும் நோக்கத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் ஜீவகாருண்ய அமைப்பினர் உதவியுடன் இன்று 38 தாய்மார்களின்குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகம் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்நேரில் சென்று வழங்கினார்.மேலும் அவர்களிடம் கொரோனா காலத்தில் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் உணவு பழக்கங்களில் அதிக அக்கறை கொள்ளும்படியும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும்படிஅறிவுறுத்தினார்.மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

