
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சை மனைவி ரஞ்சிதம் 43 இவர் நேற்று காலை காடுபட்டி ரோட்டில் உள்ள வாய்க்காலில் ஊராட்சி 100 நாள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது பாம்பு கடித்தது இதனால் வேதனையில் ரஞ்சிதம் துடிதுடித்துக் கொண்டிருந்த இவரை ஊராட்சி செயலாளர் மனோ பாரதி சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் சிகிச்சை அளித்து பின்பு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று ரஞ்சிதம் இறந்தார் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்