காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி உட்பட 20 பேர்
கோவாவில் அதிரடி கைது

347

காஞ்சிபுரம், செப்.21:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மறைந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான தினேஷ் உள்ளிட்ட தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 20 பேர் கோவாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகி உள்ள தகவலால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. மேலும், இவர் பல்வேறு ரவுடிகளை கூட்டாளியாக வைத்து கொண்டு தொழிலதிபர்கள் உள்பட பலரை மிரட்டி பணம் பறித்து வந்தார். இந்த நிலையில் ரவுடி ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்த ஸ்ரீதரை போலீசார் நெருங்குவதற்குள் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்
இதையடுத்து, ரவுடி ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மத்தியில் அவரது இடத்தை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டது. இதில் ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ், ஸ்ரீதரின் உறவினர் தணிகா, பொய்யாக்குளம் தியாகு ஆகியோர் தனித்தனி குழுக்களாக செயல்பட்டு வந்தனர்.
இதனால் காஞ்சிபுரம் பகுதியில் இவர்களுக்கிடையே நடைபெறும் கோஷ்டி மோதலில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், ரவுடிகள் தினேஷ், தணிகா ஆகியோர் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், செய்யாறில் சதீஷ் என்ற வாலிபரும், காஞ்சிபுரம் வணிகர் தெருவில் கருணாகரன் என்ற வாலிபரும் கொலை செய்யப்பட்டனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் தனது அடியாட்களை ஏவிவிட்டு, ரவுடி தணிகாவின் கூட்டாளிகளான கோபி, ஜீவா, ஆகியோரை பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தார். ரவுடிகள் தனது அடியாட்கள் மூலம், மிரட்டல், மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் பல ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த ரவுடி தினேஷ் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் கோவா மாநிலத்தில் ஒன்றுகூடி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது அதன்படி எஸ்பி சண்முகப்பிரியா தலைமையிலான மாவட்ட தனிப்படை கோவா சென்று லாட்ஜில் பதுங்கி இருந்த தினேஷ், தியாகு, கார்த்திக், ராஜேஷ், மணிகண்டன், டேவிட், ராஜா, சதீஷ் ,விக்னேஷ், மணிமாறன், துளசிராம், கடலூர் ரவுடி சுரேந்திரன் உள்ளிட்ட 20 ரவுடிகளையும் அதிரடியாக கைது செய்து காஞ்சிபுரம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தினேஷ் மற்றும் பொய்யாகுளம் தியாகு உள்ளிட்ட ரவுடிகள் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளரிடம் 10 லட்ச ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டி விட்டு தனது ஆதரவாளர்களுடன் கோவா மாநிலத்துக்கு சென்று தலைமறைவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம்
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 ரவுடிகள் கோவாவில் காஞ்சிபுரம் தனிப்படை போலீசார் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மண்டல காவல்துறைத் தலைவர் சாமுண்டீஸ்வரி சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here