மாணவர்களே நாளைய மாற்றம்! எதிர்காலம்!! என நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வழிகாட்டுதல் கூட்டத்தில் மாணவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுரை.

217

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கல்வித் துறையின் சார்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா.தலைமையில் 2020 ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் Neet தேர்வு எழுதிய 48 மாணவ – மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கினார். வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்தோடும் வாழக்கையை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்என்றும்,மேலும்மாணவர்களே நாளைய மாற்றம்,எதிர்காலம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here