
மதுரை:
மதுரை கீரைத்துறை பகுதியில் இருளப்ப சுவாமி கோவில் தெருவில் சந்தேகத்துக்குரிய வகையில் பொதுமக்கள் கூட்டமாக நின்று இருந்தனர். அந்த வழியாக சென்ற போலீசார் விசாரணை செய்தபோது
அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண் உரிய அங்கீகாரம் இல்லாமல் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவர் என கூறிய அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து அந்த போலி மருத்துவர் கைது செய்த காவல்துறையினர் அவர் வீட்டில் வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள் மருந்து மாத்திரைகளை பதிவு செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்