மதுரையில் குடும்பத்தகராறு இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீவைத்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய் – இரண்டு குழந்தைகள் தீயில் கருகி பலி.

558

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி,

இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அவ்வபோது பிரச்சினை ஏற்பட்டு வந்தது,

இந்த நிலையில் நேற்று இரவு மனைவி தமிழ்ச்செல்வி தன்னுடைய இரண்டு குழந்தைகளான வரணிஸ்ரீ மற்றும் வர்ணிகாஸ்ரீ ஆகிய குழந்தைகளுக்கும் தனக்கும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்,

இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலி தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் – திடீர் நகர் போலீஸ் விசாரணை.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here