அரியலூரில் மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்திருமேனி
முன்னிலையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது

199

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி முன்னிலையில் இன்று சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இவ்ஆலோசனைக் கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ் ,சிமெண்ட் ஆலை அலுவலர்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் . கனரக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முந்திசெல்வதைத் தவிர்க்க வேண்டும், செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்க கூடாது, போதைப் பொருள் கொண்டு வாகனங்களை இயக்க கூடாது, கனரக வாகனங்களில் தார்பாய்கள் அமைத்து மட்டுமே செல்ல வேண்டும் எனவும், மேலும் விபத்து பகுதிகளில் புதியதாக வேகத்தடைகள் அமைப்பது, முக்கிய சந்திப்புகளில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஒளிரும் பட்டைகள் பொருத்துவது தொடர்பாகவும் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்திருமேனி ஆலோசனைகள் வழங்கினார்.

இதனையடுத்து அவசர காலங்களில் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உதவவும் சிமெண்ட் ஆலை அலுவலர்கள் உறுதியளித்தனர்.

இறுதியில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பயணம் செய்வதை உறுதிப்படுத்தவும், மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் துறை தனிபிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்மதிவாணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here