


அரியலூர் மாவட்டம் கயர்லபத் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் பயணம் செய்யும்போது பொறுமையுடனும், விழிப்புடனும் பயணம் செய்யவும், மேலும் செல்போன்பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை இயக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தி,மீறினால் மாவட்ட காவல் துறை சார்பில் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பின்னர் கனரக வாகன ஓட்டுநர்கள் அனைவரும் விபத்தில்லா அரியலூர் மாவட்டத்தை உருவாக்குவோம் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வின்போது அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.