Home தமிழ்நாடு ஓமலூர் அருகே காப்புகாட்டில் 3சந்தனமரங்களை வெட்டிய இரண்டு நபர்களை டேனிஷ்பேட்டை வனசரக அலுவலர்கள் கைது செய்து நடவடிக்கை.

ஓமலூர் அருகே காப்புகாட்டில் 3சந்தனமரங்களை வெட்டிய இரண்டு நபர்களை டேனிஷ்பேட்டை வனசரக அலுவலர்கள் கைது செய்து நடவடிக்கை.

0
ஓமலூர் அருகே காப்புகாட்டில் 3சந்தனமரங்களை வெட்டிய இரண்டு நபர்களை டேனிஷ்பேட்டை வனசரக அலுவலர்கள் கைது செய்து நடவடிக்கை.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி தாலுக்கா பகுதியில் உள்ள லோக்கூர் காப்புக்காடு சேர்வராயன் மலை ஒட்டிய பகுதுயாக உள்ளது. இதில் சந்தன மரங்களை கடந்த சுமார் 5ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பில் நடப்பட்டு அந்த மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் மரங்களுக்கு பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 18ந்தேதி மர்ம நபர்கள் மூன்று சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதைதொடர்ந்து தகவலை அறிந்த வனபாதுகாவளர்கள் விரைந்து சென்று பார்த்து 2க்கும் மேற்பட்ட மரங்களின் அடி துண்டுகளை வெட்டி எடுத்து சென்ற நிலையில் மேல் பகுதிகளை விட்டு சென்று விட்டனர். உடனடியாக அந்த மீதமுள்ள மரங்களை வனத்துறையினர் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து டேனிஷ்பேட்டை வனசரக அலுவலர் பரசுராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சந்தனமரம் கடத்தி சென்ற காடையாம்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த கண்ணப்பாடியில் வசிக்கும் திருமண் மகன் சுந்தரம்(31) மற்றும் பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ்(33) இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து திருடர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் மொத்தமாக 40 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு இணக் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here