திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் வீரராகவனுக்கு குவியும் பாராட்டுகள்..

217

தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு. வீரராகவன் அவர்கள் திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகில் உள்ள ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது அந்த மிஷின் மேல் ஒரு பர்ஸ் இருந்தது அதில் 15 ஆயிரம் பணமும் ஏழு ஏடிஎம் கார்டும் ஒரு டிரைவிங் லைசென்ஸ் இருந்தது அதை உரிய நபரிடம் ஒப்படைக்க சமூக வலைதளங்களில் ஓட்டுனர் உரிமத்தை பதிவு செய்து உரிய வழியில் வந்து ஆதாரத்தை காட்டி பெற்றுச் செல்லலாம் என தெரிவித்திருந்தார் மேலும் பல குழுக்களிலும் ஷேர் செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் திருவிக நகரைச் சேர்ந்த ரகு அவர்கள் தலைமை காவலர் வீர ராகவனை நேரில் சந்தித்து ஆதாரத்தை காட்டினார் இதனையடுத்து பரிஸ் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரகு தலைமை காவலர் திரு.வீரராகவன் அவர்களின் கண்ணியத்தை பாராட்டி நன்றி தெரிவித்து சென்றார். தலைமை காவலர் இச்செயலை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல் இ.கா.ப., அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here