0

அரியலூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் பங்கேற்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்…

அரியலூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் பங்கேற்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்…

அரியலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட நகைக்கடை, நகை அடகு கடை மற்றும் வர்த்தக சங்கத்தினர் ஏராளமானோர்
பங்கேற்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் அரியலூர் மாதா கோயில் அருகே உள்ள St. மேரிஸ் மஹாலில் அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது: அரியலூரில் இயங்கி வரும் அனைத்து நகைக்கடை, நகை அடகு கடை மற்றும் அனைத்து வர்த்தக கடைகளிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் , மேலும் வெளியே பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் சாலையையும் கடைகளின் நுழைவாயிலையும் கண்காணிப்பது போல் அமைக்க வேண்டும். மேலும் வெளியே தெரியும்படி பொருத்தப்படும் கேமராக்கள் போல ரகசிய கேமராக்களைபொருத்தவேண்டும். மேலும் சிசிடிவி கேமராக்களை இரவு நேரங்களில் ஆப் செய்யக்கூடாது , தினந்தோறும் கேமராக்கள் சரிவர இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும், மேலும் பதிவான சிசிடிவி காட்சிகள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அழிக்கப்படாமல் சேமித்து வைக்கவும் அதற்கு ஏற்றது போல் தரமாககேமராக்கள்உபயோகப்படுத்த அறிவுரை வழங்கினார்.

நகை கடை பாதுகாப்புக்கு இரவு நேர காவலாளிகள் உடனடியாக நியமிக்கப்பட்டு விழிப்புடன் இருக்கவேண்டும் ,அவர்களுக்கு இரவு நேரங்களில் அவ்வபோது கடைகளின் பின்புறம் மற்றும் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தவேண்டும் .

கடைகளில் அலாரங்கள் பொருத்தி அவை சரிவர இயங்குகிறதா என அவ்வப்போது ஆய்வு செய்யவும் மேலும் அலாரம் ஒலிக்கும்போது அதற்கான தகவல் நகைகடை
உரிமையாளர்களுக்குகைபேசியில் தெரியும் வகையிலும் அலாரங்கள் பொருத்த அறிவுறுத்தினார்.
மேலும் நகைக்கடை மற்றும் நகை அடகு கடைகளில் உள்ள சுவர்,கதவு மற்றும் ஜன்னல்கள் உறுதியோடும் சரியான தரத்தில் இருக்கிறதா என அவ்வப்போது அதன் உரிமையாளர்கள் ஆய்வு செய்து பராமரிக்க அறிவுறுத்தினார்.

முடிவில் நகை கடை உரிமையாளர்கள் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்து குற்றம் நிகழாவண்ணம் செயல்படுவோம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேணி மற்றும் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here