கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உளவுத்துறையின் சிறப்பு உதவி ஆய்வாளர் பலி

305

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் மாவட்ட மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆயாவாளராக பணிபுரிந்து வந்தவர் நாகர்கோவிலை சேர்ந்த சுரேஷ்குமார். 48 வயதான இவர், உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பரிசோதனை முடிவில் கொரானா தொற்று கண்டறியப்பட்டதன் காரணமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆயினும்
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குமரி மாவட்டத்தில் காவல்துறையின் கொரோனாவுக்கு முதல் உயிர் இழப்பாகும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here