
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேல அனுப்பானடி பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜன் இவரது மகன் பத்மநாபன் வயது 35 இவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதனை தொடர்ந்து கோவிந்தராஜன் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்