அரியலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.!!!

113

அரியலூர் மாவட்டம் கயர்லாபத் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி அரியலூர் நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலையில் இன்று வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் பற்றிய குறும்படம் காண்பிக்கப்பட்டு சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது தொடர்பாகவும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவது பற்றியும், மேலும் இரண்டு பேருக்கு அதிகமான நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும், நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிவது அவசியம் குறித்தும், சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றியும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குதல், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குதல் பற்றியும், கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பொது இடங்களில் பாதுகாப்புடன் இருப்பது பற்றியும்விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here