பெண்கள் குழந்தைகள் பாதுகா
க்கும் கேடயம் திட்டம் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பூண்டி கிராம ஊராட்சியில் விழிப்புணர்வு முகாம்.

302

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில்இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில் கீழப்பழுவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் உதவி ஆய்வாளர் அமர்ஜோதி ஆகியோர் இணைந்து “”கேடயம் (SHIELD)”* திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கேடயம் திட்டம் குறித்த அச்சிடப்பட்ட பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல்துறையின் கேடயம்(SHIELD) திட்டத்தின் உதவி எண்கள் 6383071800, 9384501999 பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.

இம்முகாமில் காவலர்கள் அன்பரசி மற்றும் ஜெகதாம்பி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம்பாள் சாம்பசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here