காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு- காஞ்சிபுரம் சரக காவல் துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி துவக்கி வைத்து உரையாற்றினார்–

233

காஞ்சிபுரம், அக்.06: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காஞ்சிபுரம் சரக காவல் துணைத்தலைவர் பா.சாமுண்டீஸ்வரி தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமையகம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் நல காவல் அதிகாரிகளின் கடமை மற்றும் பொறுப்புகள் பற்றி விவரித்து அறிவுரை வழங்கினார்.

குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு அடையாளப்பட்டை (Badge) வழங்கி குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பிரசுரம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகபிரியா. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், காவல் கண்காணிப்பாளர். (குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம். சென்னை) வி.ஜெயஸ்ரீ. காஞ்சிபுரம் சிறார் நீதிமன்ற நடுவர்-1 செந்தில்குமார். காஞ்சிபுரம் குற்றதொடர்வுத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம். குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் அனிதா, குழந்தைகள் நல அமைப்பு ராமச்சந்திரன், இளம் சிறார் நீதி குழுமம் ஆரோக்கியராஜ்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்த பயிற்சி நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்து 44 குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here