
தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது கூட்டத்திற்கு எஸ்பி பிரவேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த குற்ற வழக்குகள் சாலை விபத்து நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் எஸ்பி குணசேகரன் தர்மபுரி டிஎஸ்பி அண்ணாதுரை பெண்ணாகரம் டிஎஸ்பி மேகலா மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ராஜா சோமசுந்திரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.