நில மோசடி புகாரில் பெண் இரண்டு மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

311

நில மோசடி புகாரில் பெண் இரண்டு மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மற்றும் இரண்டு மகன்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்
தஞ்சையை சேர்ந்தவர் ஜார்ஜ் டேவிட் இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த சூசைராஜ் மற்றும் அவர் மனைவி ஆரோக்கிய செல்வி அவர்களிடம் இருந்து நிலத்தை விலைபேசி 57 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளார் நில விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது நிலம் ஜார்ஜ் டேவிட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் சூசைராஜ் மற்றும் அவர் மனைவி ஆரோக்கிய செல்வி இருவரும் நிலத்தை ஜார்ஜ் டேவிட்டுக்கு தெரியாமல் வேறு ஒருத்தருக்கு விற்க முயற்சி செய்துள்ளனர் இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது மேலும் ஜார்ஜ் டேவிட் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் ஆரோக்கிய செல்வி தன் இரு மகன்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் தங்கள் வீட்டை கந்துவட்டி கும்பல் தாக்கியதாக புகார் செய்துள்ளார் தீக்குளிக்க முயன்ற ஆரோக்கிய செல்வியை காவல்துறையினர் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here