
தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார்.இவர் தேனி அருகே உள்ள அன்னஞ்சியிலும் இவரது மனைவி பிரியா சின்னமனூர் அருகே ஓடைபட்டியிலும் வருவாய் சம்பந்தப்பட்ட ஒரே துறையில் அலுவலர்களாக வேலை செய்து வருகின்றனர்.கணவன் மனைவி இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்களது 2 வயது மகன் அதியன் சித்தார்த் அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தான் திடீரென வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று வந்தால் தாழ்பல் தானாக விழுந்து கொண்டது. வெளியில் வரமுடியாமல் குழந்தை அழுததால் பெற்றோர்கள் செய்வதறியாமல் பதட்டம் கொண்டு அதன் பிறகு கணவர் மனைவி இருவரும் கதவைத் திறக்க முயற்சித்தனர். பின்னர் போடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்த நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை திறக்க முயற்சித்தும் முடியாமல் இறுதியில் கடப்பாரை கம்பியை எடுத்து கதவை உடைத்து குழந்தையை மீட்டு எடுத்தனர். பதட்டமடைந்த பெற்றோர்கள் கதறி அழுத குழந்தையை தூக்கி மடியில் வைக்க மயக்கமடைந்த சிறுவன் சிறிது நேரத்தில் தெளிவடைந்து கண்விழித்து அதை கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினற்கு நன்றி தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.