



பழுதான லாரி பின்னால் மோதிய அரசு பேருந்து ஓட்டுனர் பலி 9 பேர் காயம்…. சென்னையில் இருந்து பாபநாசம் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலை அருகே வந்து கொண்டிருந்தது அதிகாலை 2 மணி அளவில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சங்கரன் என்பவர் அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார் இதை கவனிக்காத அரசு பேருந்து ஓட்டுனர் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் பலமாக மோதினார் இதில் சம்பவ இடத்திலேயே அரசு பேருந்து ஓட்டுநர் சங்கரன். உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர் 4 பேர் லேசான காயம் மற்றும் 25 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர் விபத்து குறித்து தகவலறிந்த மதுரை மேலூர் 108 வாகனமாக படுகாயம் அடைந்தவர்களை விரைவாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .சம்பவ இடத்துக்கு விரைந்த கொட்டாம்பட்டி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் . செய்தியாளர்,வி காளமேகம் மதுரை மாவட்டம்