மதுரை வாடிப்பட்டி அருகே குழந்தையின் தொட்டில் சேலை கழுத்தில் இறுகியதால் 8ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி. விளையாட்டு விபரீதமான பரிதாபம்

209

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தை சேர்ந்தவர்
வேல்முருகன், செல்வி தம்பதியினர். இவர்களது மகன் பிரகாஷ் (13) அங்குள்ள பள்ளியில்
8வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில்
அங்கப்பன்கொட்டத்தில் உள்ள பாட்டி செல்லம்மாள் வீட்டிற்கு
சென்றிருந்தான். அங்கு தாய்மாமன் அருணின்
8மாத குழந்தைக்காக தொட்டில் கட்டப்பட்டிருந்தது. 
அந்த தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அழுகவே குழந்தையை
தொட்டிலிருந்து தூக்கி வெளியே எடுத்து சென்றுள்ளனர். பின்னர்
அந்த தொட்டில் சேலையில் பிரகாஷ் சுற்றி சுற்றி விளையாடியிள்ளான். எதிர்பாராதவிதமாக
பிரகாஷ் கழுத்தை சேலை சுற்றி இறுக்கியதால் மூச்சு திணறி மயங்கினான்.
உடனே பிரகாசை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியில் பரிதாபமாக பிரகாஷ் உயிரிழந்தான். இது குறித்து வாடிப்பட்டி
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர். மாணவர் உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here