
உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்றுஅரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரியலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி(பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு) தலைமையில் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுமதி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கன்னியம்மாள், அரியலூர் நகர காவல் உதவி ஆய்வாளர்(பயிற்சி) மேகலா, பெண் காவலர்கள் மற்றும் பெண் காவலரின் பெண் குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்று உலக பெண் குழந்தைகள் தினத்தை கேக் வெட்டிமகிழ்ச்சியாககொண்டா
டினர்.