அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் இயங்கி வரும் வேலா கருணை இல்லத்தினை இன்று நேரில் அரியலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர்
V.R.ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார் .வேலா கருணை இல்லத்திலுள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களின் நலன்கள் குறித்து இல்ல காப்பாளரிடம் விசாரித்தார். பின்னர் வேலா கருணை இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு மற்றும் காரங்கள் வழங்கினார். மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கி கொரானா காலத்தில் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் கயர்லாபாத் காவல் ஆய்வாளர் ராஜா உடனிருந்தார்.
